Enable Javscript for better performance
கூடங்குளத்தில் 3-ஆவது 4-ஆவது அணு உலைகள்- Dinamani

சுடச்சுட

    
    kudunkulam

    கூடங்குளத்தில் 3}ஆவது மற்றும் 4}ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அண்மையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை, கூடங்குளத்தில் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளுக்கு நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்தது.

    மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம் மே மாதம் முடிவடைவதால் அதற்கு முன்பாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    ரஷியாவின் உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கி முழு உற்பத்தித் திறனை எட்டும் நிலையில் உள்ளது. 2ஆவது அணு உலையும் இந்த ஆண்டு செயல்படத் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரஷியாவுக்குச் சென்றபோது 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அணு உலை விபத்து இழப்பீடு மசோதா ஷரத்துக்களின்படி புதிய ஒப்பந்தத்தில் தாங்கள் கையெழுத்திட முடியாது என்று ரஷியா கூறியதால் ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai