சுடச்சுட

    
    elephant

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 3 யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே சானமாவு காட்டுக்கு கடந்த மாதம் 30 யானைகள் வந்தன. இந்த யானைகளை வனத் துறையினர் போராடி தேன்கனிக்கோட்டை வனத்துக்கு விரட்டினர். இந்த நிலையில், அந்த யானைகள் மீண்டும் சானமாவு காட்டுக்கு திரும்பி வந்துள்ளன. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு முழுவதும் மேளங்கள் அடித்தும், பட்டாசுகளை வெடித்தும் 30 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனத்துக்கு விரட்ட முயன்றனர். ஆனால், யானைகள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து சானமாவு காட்டிலிருந்து போடூர்ப்பள்ளம் காட்டுக்குச் சென்றன.

    தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உலிகம், கர்நாடக மாநிலம், பன்னேரிகட்டா வனத்தில் கடும் வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர், உணவு தட்டுப்பாடு நிலவுவதே காரணம் எனக் கூறப்படுகிறது. சானமாவு பகுதியில் வற்றாத ஜீவநதியாக தென்பெண்ணை ஆறு உள்ளதால், கர்நாடக யானைகளின் புகலிடமாக அது மாறியுள்ளது.

    இதனால், யானைகளை விரட்டுவதில் வனத் துறையினரின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. இருப்பினும், தொடர்ந்து வனத் துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இந்தக் கூட்டத்திலிருந்து தனியாகப் பிரிந்த 3 யானைகள் சூளகிரி அருகே முகாமிட்டுள்ளன.

    இவை பன்னப்பள்ளி, ஆலியாளம் ஆகிய கிராமங்களில் புகுந்து விளைநிலங்களில் பயிர்களை மேய்ந்தும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

    இந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai