Enable Javscript for better performance
\\\"திமுக, அதிமுகவுக்கு இது சோதனையான தேர்தல்\\\'- Dinamani

சுடச்சுட

    
    tkrangarajan

    இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவதால், திமுக, அதிமுகவுக்கு இது சோதனையான தேர்தல், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

    மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.விக்ரமன் அறிமுகக் கூட்டத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின் வெற்றிக்காக மக்களை சந்தித்து வருகிறோம்.

    இடதுசாரிகள் தங்கள் கூட்டணியில் இல்லாததை நினைத்து, கட்சிகள் வருந்தும் சூழல் ஏற்படும். 1998இல் திமுக கூட்டணியில் இருந்து விலகி, மதுரை, வடசென்னையில் தனித்து போட்டியிட்டோம். அதன்பிறகு, திமுக பொதுக்குழுவில் அதற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

    இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவதால், திமுக, அதிமுவுக்கு இந்தத் தேர்தல் மிகப்பெரிய சோதனையாக இருக்கும். இக்கட்சிகளுக்கு எதிரான பொதுவான வாக்குகள் இடதுசாரிகளுக்கு கிடைக்கும். மேலும் சில அரசியல் கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு தரும் வாய்ப்புள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai