சுடச்சுட

  
  vijayakanth

  தேமுதிகவின் 2-ஆவது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

  சேலம் தொகுதியில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

  இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளரை விஜயகாந்த் ஏற்கெனவே அறிவித்திருந்தார். மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளரை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

   

  இப்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர் விவரம்:

   

  கள்ளக்குறிச்சி-டாக்டர் வி.பி.ஈஸ்வரன்

  திருப்பூர்-என்.தினேஷ்குமார்

  கரூர்-என்.எஸ்.கிருஷ்ணன்

  விழுப்புரம் (தனி)-கே.உமாசங்கர்

  சேலம்-எல்.கே.சுதீஷ்

  மத்திய சென்னை-பேராசிரியர் ஜே.கா.ரவீந்திரன்

  கடலூர்-பேராசிரியர் ஆர்.ராமானுஜம்

  திண்டுக்கல்-ஏ.கிருஷ்ணமூர்த்தி

  திருநெல்வேலி-எஸ்.சிவனணைந்த பெருமாள்

  நாமக்கல்-எஸ்.கே.வேல்

  இதில் நாமக்கல் தொகுதியின் வேட்பாளராக முன்பு என்.மகேஸ்வரன் அறிவிக்கப்பட்டிருந்தார். உடல் நலத்தைக் காரணம் காட்டி அவர் போட்டியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததால் அவருக்குப் பதிலாக நாமக்கல் தொகுதிக்கு எஸ்.கே.வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

   

  ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்:

   

  திருவள்ளூர்-வி.யுவராஜ்

  வடசென்னை-எம்.செளந்திரபாண்டியன்

  திருச்சி-ஏ.எம்.ஜி.விஜய்குமார்

  மதுரை-டி.சிவமுத்துகுமார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai