சுடச்சுட

    

    நாட்டைக் காப்பாற்ற மோடியை ஆதரியுங்கள்: இல.கணேசன் பிரசாரம்

    By dn  |   Published on : 24th March 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ganesan_canvas

    நாட்டைக் காப்பாற்ற மோடியை ஆதரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், தென் சென்னை வேட்பாளருமான இல.கணேசன் கூறினார்.

    ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் அதிகாலை நடைபயிற்சிக்கு வந்த பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், நரேந்திர மோடியை ஆதரிக்க வேண்டும் என்றும், தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    பின்னர், "மலையாளி பிரண்ட்ஸ் ஃபார் மோடி' அமைப்பு சார்பில் அசோக் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற இல.கணேசன் பேசுகையில், "நாடு பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால், தேசத்தை காப்பாற்ற நரேந்திர மோடியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

    வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும். அதன் மூலம் வருங்காலம் சிறப்பாக அமையும்' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai