Enable Javscript for better performance
பாஜக கூட்டணி திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி- Dinamani

சுடச்சுட

    
    ela_ganesan_canvas

    தமிழகத்தை 1967 முதல் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியாக உருவாகி இருப்பதுதான் பாஜக கூட்டணி என்று தென் சென்னை பாஜக வேட்பாளர் இல.கணேசன் கூறினார்.

    மேடவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    இந்தத் தேர்தல் திமுக-அதிமுகவிற்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. பாஜகவிற்கும், காங்கிரஸýக்கும் நடைபெறும் தேர்தல். எங்களை மதவாதக் கூட்டணி என்று வர்ணிக்கும் திமுகவிற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல பதிலை அளித்து இருக்கிறார்.

    பாமகவைப் பொறுத்தவரை தமிழர்களின் கலாசாரம், பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் கட்சி. நாங்கள் இந்திய மண்ணின் கலாசாரம், பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கட்சி.

    மக்களவைத் தேர்தலைச் சந்திக்க தமிழகத்தில் உருவாக்கப்பட்ட மெகா கூட்டணி.

    மத்தியில் நரேந்திர மோடியை ஆட்சி பீடத்தில் அமர்த்தப்போவது மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் மகத்தான மாற்றத்தை விளைவிக்கப்போகும் கூட்டணி. தமிழகத்தை 1967 முதல் மாறி மாறி ஆண்டு வரும் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியாக உருவாகி இருக்கிறது என்றார் இல.கணேசன்.

    வெங்கையா நாயுடு பேசும்போது, "தமிழக மீனவர்களின் பிரச்னை, இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

    பாஜக தேசியச் செயலர் தமிழிசை செüந்திரராஜன், மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதா சுப்ரமணியம், பொற்றாமரை சங்கரன், மாவட்ட சமூக நல்லிணக்க அணித் தலைவர் ஈ.ச.பரதன், தென் சென்னை மாவட்டச் செயலர் காளிதாஸ், பாமக, தேமுதிக, மதிமுக, ஐஜேகே கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai