சுடச்சுட

    

    ப.சிதம்பரத்துக்கு திமுக உறுதுணையா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி விளக்கம்

    By dn  |   Published on : 24th March 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunanidhi

    மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக உறுதுணையாக இருந்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதற்கு, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    காரைக்குடி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உறுதுணையாக இருந்த திமுகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.

    சிதம்பரத்துக்கு உறுதுணையாக இருந்த காரணத்தினால்தான் செய்யாத குற்றத்துக்காக திஹார் சிறையில் மாதக் கணக்கில் கனிமொழி இருந்தாரா? கலைஞர் தொலைக்காட்சியின் காசோலை மூலமாக வாங்கிய கடன் தொகையை, லஞ்சத் தொகை என்று கூறி வழக்குப் போடப்பட்டுள்ளது.

    அந்த வழக்கு உண்மையா, இல்லையா? என்று தெரிவதற்கு முன்பாகவே மத்திய அரசின் வருமான வரித் துறை, ரூ.200 கோடி கடன் பெற்றதற்காக ரூ.90 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.

    நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் என் துணைவியாரிடம் வீட்டுக்கே வந்து, விசாரணை நடத்தப்பட்டது. இவையெல்லாம் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது நடைபெற்ற சம்பவங்கள் ஆகும்.

    ஆனால், இந்தக் காரணங்களுக்காக மத்திய அரசில் இருந்து, திமுக விலகவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து, காட்டிய அலட்சியத்தின் காரணமாகத்தான், அதிலிருந்து விலகினோம் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai