சுடச்சுட

  
  narayanaswamy

  புதுவையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தடையாக உள்ளதாக முதல்வர் ரங்கசாமி பொய்ப்பிரசாரம் செய்து வருகிறார் என்று புதுவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான வி.நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் நாராயணசாமி அமைச்சராக இருந்து கடந்த ஆண்டுகளில் புதுச்சேரியில் செய்த சாதனைகள் குறித்த பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பட்டியலை வி.நாராயணசாமி வெளியிட, எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் பெற்றுக் கொண்டார்.

  பின்னர், வி.நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது: புதுவையின் வளர்ச்சிக்கு நாங்கள் (மத்திய அரசு) தடையாக உள்ளதாக முதல்வர் ரங்கசாமியும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். உண்மையில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமானத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எம்.பி. நிதி முழுமையாக செலவிடப்பட்டுள்ளது. 2 ரயில்கள் மட்டுமே சென்ற புதுவையில் தற்போது 17 ரயில்களை மக்கள் வசதிக்காக விட்டுள்ளோம். கடந்த 2 மாதங்களில் மட்டும் சுற்றுலா, குடிநீர்த் திட்டம், மேம்பாலங்களுக்கு என ரூ.770 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

  சோனியா, ராகுல் பிரசாரம்: மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறேன்.

  புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

  சிறப்பு அந்தஸ்து பெற நடவடிக்கை: மாநில அந்தஸ்தை தனது அதிகாரத்துக்காகத்தான் கேட்கிறார் ரங்கசாமி. நாங்கள் வலியுறுத்துவது சிறப்பு மாநில அந்தஸ்தை. மாநில அந்தஸ்து கிடைத்தால் 30 சதவீத நிதிதான் மத்திய அரசிடம் கிடைக்கும். நாங்கள் கூறுவதுபோல் சிறப்பு மாநில அந்தஸ்தால் 90 சதவீத நிதி கிடைக்கும். 70 சதவீத கிராம மக்கள் காங்கிரஸூக்கு ஆதரவாக உள்ளனர். நகர்ப்புறத்தில் உள்ள 15 சதவீத மக்கள் தலைவிதியை நிர்ணயிக்க மாட்டார்கள் என்றார் நாராயணசாமி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai