சுடச்சுட

  
  karunidhi

  சென்னை சேப்பாக்கத்தில் புதன்கிழமை (மார்ச் 26) மாலை 5 மணிக்கு திமுக வேட்பாளர்களின் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தொடக்கி வைக்கிறார்.

  ஏப்ரல் 5 முதல் 21-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய இருப்பதாக கருணாநிதி அறிவித்துள்ளார்.

  முதலாவதாக சென்னை சேப்பாக்கம் நெடுஞ்செழியன் நகரில் புதன்கிழமை (மார்ச் 26) மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், திமுக வேட்பாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் (தென் சென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை), ஆர். கிரிராஜன் (வட சென்னை) ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தை கருணாநிதி தொடக்கி வைக்கிறார்.

  அன்பழகன் பிரசாரம்: திமுகவின் வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தமிழகம் முழுவதும் 12 நாள்களும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி 16 நாள்களும் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

  அன்பழகன் மார்ச் 30 முதல் ஏப்ரல் 11 வரை பிரசாரம் செய்கிறார். கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களில் கருணாநிதி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அந்த மாவட்டங்களில் க.அன்பழகன் பிரசாரம் செய்கிறார்.

  கனிமொழி: கனிமொழி ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 22 வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

  நடிகை குஷ்பு ஏப்ரல் 5-ஆம் தேதி திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்கி, ஏப்ரல் 22-ஆம் தேதி திருவள்ளூரில் முடிக்கிறார்.

  நடிகர் வாகை சந்திரசேகர் ஏப்ரல் 1-ஆம் தேதி திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்கி, ஏப்ரல் 22-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai