சுடச்சுட

  
  evks

  தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு முதல்வர் தான் காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

  கோபியில், திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

  தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு முதல்வர்தான் காரணம். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையை மாநில அரசு சரியாகக் கையாண்டு இருந்தால், இந்த மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.

  சத்தி-சாம்ராஜ் ரயில் திட்டத்துக்கான ஆய்வுப் பணி முடிவுற்று வேலை துவங்குவதற்காக மத்திய அரசிடம் கூறி ஏற்பாடு செய்தேன். ஆனால் அப்போது சுற்றுச் சூழல் துறையில் இருந்த அனுமதி கிடைக்கவில்லை. வனப் பகுதியில் ரயில்வே பாதை அமைத்தால், அங்குள்ள விலங்குகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இயற்கை சூழ்நிலை கெட்டுவிடும் என்ற காரணத்தினால், அந்தத் திட்டத்தைத் தொடர முடியவில்லை.

  திருப்பூர் மக்களவைத் தொகுதியில் என்னை ஆதரித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அல்லது ராகுல்காந்தி பிரசாரம் செய்வார்கள். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

  பேட்டியின்போது கட்சியின் மாநில துணைத் தலைவர் நல்லசாமி, மாநில பொதுச் செயலாளர் கள்ளிப்பட்டி பாலு, மாவட்டத் தலைவர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஈ.விஸ்வநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai