சுடச்சுட

    
    Alagiri

    மக்களவைத் தேர்தலில் எனது ஆதரவு யாருக்கு என்பதை விரைவில் தெரிவிப்பேன் என்று மு.க. அழகிரி பேசினார்.

    ராஜபாளையம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலர் கதிரேசன் மகன் க. தமிழ்செல்வக்குமார் இல்ல விழா ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மு.க. அழகிரி பங்கேற்று பேசியதாவது:

    இப்பகுதியைச் சேர்ந்த கதிரேசன் காலில் செருப்புக் கூட அணியாமல் தி.மு.க.வை வளர்த்தவர். இவரது மகன் என் பெயரில் பேரவை நிறுவி, ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்த விழாவில் நான் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். என்னுடைய கொள்கை கலைஞரை காப்போம். தி.மு.கவை காப்போம். வளர்ப்போம் என்பது தான். அதில் மாற்றம் ஏதும் இல்லை. விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ரத்தினவேல் ஒரு வியாபாரி. இவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? ரத்தினவேல் எனக்கு நல்ல நண்பர். என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதனால், இவருக்கு நான் கட்சியில் போட்டியிட சீட் வாங்கித் தர வேண்டுமா?

    இதுபோல் மதுரையைச் சேர்ந்த இட்லிக் கடை உரிமையாளர் அண்ணாமலை என்பவர் எனக்கு நண்பர். நண்பராக இருந்தால் இவருக்கு நான் தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுத் தந்தால் உண்மையான தி.மு.க. வினர் என்ன நினைப்பார்கள்? இதை நான் கட்சி மேலிடத்தில் தெரிவித்து கட்சிக்கு உழைத்த, வளர்த்தவர்களுக்கு சீட் கொடுக்க பரிந்துரை செய்தால் என்னை கட்சியை விட்டே நீக்குகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் நான் யோசிக்காமல் வியாபாரியை மாவட்டச் செயலராக நியமித்து பெரும் தவறு செய்து விட்டேன். இன்று தி.மு.க.வினர் எல்லாம் இதை சுட்டிக் காட்டுகின்றனர்.

    இன்று கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர் திருநெல்வேலியில் பெரும் பண பலத்துடன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். என்னோடு இருப்பவர்களை கட்சியை வீட்டு நீக்கி விடுவதாக தலைவருக்கு பின்னால் இருக்கும் சிலர் மிரட்டி வருகிறார்கள். ஏப்ரல் 13ஆம் தேதி கலைஞர் மதுரைக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார். அப்போது அவர் என் வீட்டுக்கு வந்தால் கலைஞரை கட்சியை விட்டு நீக்கிவிடுவார்களா? என்னை கட்சியை விட்டு நீக்கியதால் எனக்கு பாதிப்பில்லை. யாருக்கு பாதிப்பு என மக்களவைத் தேர்தல் முடிவு தெரிவிக்கும்.

    தென்காசி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. ஆதரவு வேட்பாளரிடம் (டாக்டர் கிருஷ்ணசாமி) ஒரு பத்திரிக்கை பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது. அதில் அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டதால் தி.மு.க. வுக்கு பாதிப்பா? என கேள்வி கேட்டுள்ளார் நிருபர். அதற்கு அந்த வேட்பாளர் தி.மு.க. வை விட்டு அழகிரி நீக்கப்பட்டதால் தி.மு.க.வுக்கோ எனது வெற்றிக்கோ எந்த பாதிப்பும் இல்லை என கூறி இருக்கிறார். இந்த வேட்பாளர் இந்த தென்காசி தொகுதியில் எப்படி வெற்றி பெறுவார் என நான் கேட்கிறேன்.

    இவர் மூன்றாவது இடம் கூட வர மாட்டார். இவருக்கு சரியான பாடம் புகட்டுவேன். என்னிடம் பலரும் ஆதரவு கேட்டு வருகின்றனர். இன்று கூட வைகோ என்னை சந்தித்து ஆதரவு கேட்டார். நான் என் ஆதரவாளர்கள் அனைவரையும் சந்தித்து விரைவில் மக்களவைத் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறேன் என்ற விவரத்தை தெரிவிப்பேன் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai