Enable Javscript for better performance
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

    By dn  |   Published on : 24th March 2014 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி விரட்டியடித்தனர். ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு, தனுஷ்கோடி கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் 50க்கும் மேற்பட்ட படகுகளை விரட்டியடித்தனர். மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் அப்பகுதியிலிருந்து சென்றவுடன், குறைந்த அளவு மீனுடன், வெட்டிவிட்ட வலைகளை எடுத்துக்கொண்டு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கரைக்குத் திரும்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai