சுடச்சுட

  

  "வாராக்கடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்'

  By dn  |   Published on : 24th March 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

  திருச்சியில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க மண்டலக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்த அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க துணைப் பொதுச் செயலாளர் என்.ஏ. சீனிவாசன் கூறியது: 2007-ம் ஆண்டு தொடங்கி 2013-வது ஆண்டு வரையில் அனைத்து வங்கிகளிலும் சேர்த்து மொத்தம் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 294 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

  மேலும், ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல நிலுவையில் உள்ள வங்கிக் கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  2013-வது ஆண்டு வரவு செலவு அறிக்கையை சுதந்திரமான தணிக்கை குழுவைக் கொண்டு தணிக்கை செய்ய வேண்டும். பெருந்தொகையைக் கடனாகப் பெற்று வாராக்கடன் பட்டியலில் உள்ளவர்கள் அரசியல் பலத்தோடு தப்பிவிடுகின்றனர். எனவே, வாராக்கடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளோரையும், குற்ற வழக்குகளில் தண்டணை பெற்றோரைப்போல தேர்தலில் போட்டியிட அனுமதிக்காத வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai