சுடச்சுட

    
    jaya

    விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் தானே வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

    விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து ஜெயலலிதா பேசியது:

    விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். ஒலக்கூர் மற்றும் திண்டிவனம் ரயில்வே நிலையங்கள் இடையில் ரூ.20.94 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ÷இதேபோல், வெள்ளிமேடுபேட்டை-மயிலம் இடையே பேரணி என்ற இடத்தில் ரூ.22.20 கோடியில் மேம்பாலம், விக்கிரவாண்டி -நேமூர் சாலையில் முண்டியம்பாக்கம் அருகே ரூ.20.20 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றன. விருத்தாச்சலம்-உளுந்தூர்பேட்டை பகுதியில் கெடிலம் ஆற்றின் அருகே ரூ.10.36 கோடியில் பாலம் கட்டுவதற்காக மாற்றுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மகளிர் தங்கும் விடுதி: விழுப்புரத்தில் பணிபுரியும் மகளிருக்காக தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது. திண்டிவனத்தில் நீதிபதிகள் குடியிருப்புகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.17.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. திருவாமாத்தூரில் ரூ.80 லட்சத்தில் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    10 ஆயிரம் தானே வீடுகள்: தானே புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட ரூ.1.34 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் தானே வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

    ÷திண்டிவனம் வட்டம் பெருமுக்கல் பகுதியில் முக்தியாஜல ஈஸ்வரர் கோயில் மேம்பாட்டுப் பணிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திண்டிவனம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி பணிகளும், மரக்காணம், வானூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 56 ஏரிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன.

    நந்தன்கால்வாய் சீரமைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தை ரூ.10 கோடியில் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் வசதிக்காக விழுப்புரம் வட்டம் பிரிக்கப்பட்டு விக்கிரவாண்டி வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    திருக்கோவிலூர் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai