Enable Javscript for better performance
வேட்பாளர் அறிமுக மாநாட்டில் உணவு வழங்க பறக்கும்படை தடை!- Dinamani

சுடச்சுட

    

    வேட்பாளர் அறிமுக மாநாட்டில் உணவு வழங்க பறக்கும்படை தடை!

    By dn  |   Published on : 24th March 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் கிறிஸ்டியன் செக்யூலர் கட்சி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இக்கட்சியின் வேட்பாளர் அறிமுக மாநாட்டில் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ராம்நாத் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில், அக்கட்சி சார்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். தனராஜை கட்சியின் தேசிய துணைத் தலைவர் சில்வா கலீலி அறிமுகம் செய்து பேசினார்.மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்குவதற்காக கட்சி சார்பில் சைவ உணவு தயார் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரி பிரேமா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மாநாடு நடைபெற்ற மண்டபத்துக்கு விரைந்து சென்று கட்சியினருக்கு உணவு வழங்க தடை விதித்தனர். இதையடுத்து மண்டபத்தில் உணவு வழங்கும் அறை மூடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai