Enable Javscript for better performance
\\\"39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்\\\'- Dinamani

சுடச்சுட

    
    suthish

    தமிழகத்தில் பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்று, தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலரும், சேலம் தொகுதி வேட்பாளருமான எல்.கே.சுதீஷ் கூறினார்.

    தேமுதிக வேட்பாளர்களின் 2-ஆவது பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சேலம் தொகுதி வேட்பாளராக கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலர் எல்.கே.சுதீஷ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, சென்னையில் இருந்து சேலத்துக்கு கார் மூலம் வந்த எல்.கே.சுதீஷ், பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர், செய்தியாளர்களிடம் எல்.கே.சுதீஷ் கூறியதாவது:

    நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று பிரதமராவார்.

    எங்கள் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துவிட்டோம். ஆனால், திமுகவோ, அதிமுகவோ தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை.

    பாஜக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். ஒருவேளை, தமிழகத்தில் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டாலும், அவர்கள் செல்லாக் காசாகத்தான் இருப்பார்கள் என்றார் சுதீஷ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai