சுடச்சுட

  

  தமிழகத்தின் 6 இடங்களில் திங்கள்கிழமை (மார்ச் 24) 100 டிகிரி (ஃபாரன்ஹீட்) வெயில் பதிவானது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

  கோடை காலம் தொடங்கியதையடுத்து கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் அனல் காற்றுடன் கூடிய வெப்பம் வாட்டி வதைக்கிறது.

  வானில் உருவாகும் மேகக்கூட்டங்கள் குறைந்ததால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

  வரும் நாள்களில் கோடை தீவிரமடையும் என்பதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை 93 டிகிரி வெயில் பதிவானது. மாநிலத்தில் குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 68 டிகிரி வெயில் இருந்தது.

  திங்கள்கிழமை பதிவான வெயிலின் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

  வேலூர் - 103

  சேலம் - 101

  தருமபுரி, மதுரை, கரூர் பரமத்தி, திருச்சி - 100

  சென்னை - 93

  கொடைக்கானல் - 68

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai