சுடச்சுட

    

    இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற மோடி பிரதமராக வேண்டும்: இல.கணேசன்

    By dn  |   Published on : 25th March 2014 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    elaganesan

    இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் இல. கணேசன் கூறினார்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தென் சென்னை தொகுதி அலுவலகத்தில் "பாலச்சந்தரன் மாணவர் அமைப்பு' நிர்வாகிகள் இல.கணேசனை திங்கள்கிழமை (மார்ச் 24) சந்தித்து, இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பாஜக ஆதரவு தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன் கூறியது:

    இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸூம் ஒரே மாதிரி இருந்ததில்லை. பாஜக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசு இந்தியாவிடம் ஆயுதங்கள் கேட்டபோது தமிழர்களுக்கு எதிராக அது பயன்படுத்தப்படும் என்பதால் வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்டது.

    ஆனால், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து ராஜபட்ச செய்த பாவத்தில் பாதி பங்கு காங்கிரஸூக்கு உண்டு. கங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்த தமிழக கட்சிகளுக்கும் உண்டு.

    இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெறுவது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் குவிக்கப்படும் ராணுவத்தை வெளியேற்றுவது, தமிழர்கள் தங்கள் சொந்த இடத்தில் குடியேறுவது, இலங்கையில் உள்ள அனைத்து மாநிலங்களும் அதிகாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பாஜக வலியுறுத்தி வருகிறது.

    இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க நரேந்திர மோடி பிதமராக வேண்டும் என்றார் இல.கணேசன். பின்னர், பாலச்சந்திரன் மாணவர் அமைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai