சுடச்சுட

    

    ஈரோடு விஷவாயுக் கசிவு சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    By dn  |   Published on : 25th March 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் திங்கள்கிழமை

    நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊடகங்களில் இதுதொடர்பாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக 4 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

     மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணம் குறித்தும் தமிழக அரசிடம் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai