Enable Javscript for better performance
ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம்: தமிழக அரசு இரங்கல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ரகுபதி மறைவுக்கு தமிழக அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, பொதுத்துறை முதன்மைச் செயலாளர் யத்தேந்திர நாத் ஸ்வைன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பு:

    தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவரான கே.ரகுபதியின் (52) மறைவுக்கு மாநில அரசு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக தனது அரசுப் பணியைத் தொடங்கிய அவர், கடந்த 2008-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (பயிற்சி) இயக்குநர் பொறுப்பை வகித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 22-ஆம் தேதி இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என பொதுத் துறை செயலாளரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai