சுடச்சுட

    

    கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மண்டபம் மீனவர்கள் 8 பேர் மாயம்

    By dn  |   Published on : 25th March 2014 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண்டபம் பகுதியிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 2 படகுகள் உள்பட 8 மீனவர்கள் 3 நாள்களாகியும் கரை திரும்பவில்லை. இவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லாததால் அப் பகுதி மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர். இவர்களை தேடும் பணியில் மற்ற மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலிருந்து மார்ச் 22 ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த டியோனின், பொன்னழகு ஆகியோரின் படகுகளில்  ஆரோக்கியம், பிரான்ஸிஸ், முருகன், கணேசன், லோகு, முருகேசன், பூமிநாதன் உள்பட 8 மீனவர்கள் சென்றுள்ளனர்.

    இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு மறுநாள் கரைக்கு திரும்பி விடுவது வழக்கம். ஆனால், 3 நாள்களாகியும் அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அதே சமயத்தில் மாயமான மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றதாகச் எந்த தகவலும் வரவில்லை. இதைத் தொடர்ந்து மண்டபம் பகுதியிலிருந்து பீட்டர் பெர்னாண்டஸ், ராஜேந்திரன் ஆகியோரின் படகுகளில் 7 மீனவர்கள் மீன் வளத்துறை அதிகாரிகளின் அனுமதியோடு காணாமல்போன மீனவர்களை தேடி கடலுக்குச் சென்றுள்ளனர்.

    மாயமான மீனவர்களை தமிழக கடலோர போலீஸார் மற்றும் கடலோர கடற்படையினர் தேடி மீட்டுத் தர மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அவர்களின் குடும்பத்தினரும் மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai