சுடச்சுட

    

    தமிழகத்தில் மேலும் 3 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

    By dn  |   Published on : 25th March 2014 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cong

    மறைந்த முன்னாள் அமைச்சரும், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் வாழப்பாடி ராம. சுகந்தன் தருமபுரி தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் மேலிடம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

     காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 16 புதிய வேட்பாளர்களின் பட்டியலை திங்கள்கிழமை அக்கட்சி அறிவித்தது. அதில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ கே. செல்வராஜுக்கும், திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிட ஆவடி நகராட்சி முன்னாள் தலைவர் விக்டரி மோகனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் போட்டியிடும் 30 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் மார்ச் 20ஆம் தேதி அறிவித்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இதுவரை 33 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னை, வட சென்னை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கரூர், விழுப்புரம் (தனி) ஆகிய 6 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

     இதனிடையே, மற்ற மாநிலங்களுக்கு காங்கிரஸ் மேலிடம் திங்கள்கிழமை அறிவித்த 16 வேட்பாளர்களின் பட்டியலில், மத்திய அமைச்சர் நமோ நாராயண் மீனா ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதியிலும், பஞ்சாப் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுனில் குமார் ஜாக்கர் ஃபிரோஸ்பூர் தொகுதியிலும் போட்டியிகிறார்கள்.

    கடந்த தேர்தலில் நமோ நாராயண் மீனா போட்டியிட்ட டோங்க் சவாய் மாதேபூர் தொகுதி முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலத்தின் ஒளரங்காபாத் தொகுதியில் நிதின் பாட்டீல் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி சிவசேனையின் கோட்டையாக கருதப்படுகிறது.

    மர்மம் நீடிப்பு: பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியின் வேட்பாளர் பெயரை அறிவிப்பதை காங்கிரஸ் கட்சி ரகசியமாக வைத்துள்ளது.

    இந்தத் தொகுதியில் கடந்த 2 முறை போட்டியிட்ட முன்னாள் எம்.பி. ராஜேஷ் மிஸ்ராவை வேட்பாளராக அறிவிக்க அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

     அதேபோல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு முறைகேடு விவகாரத்தில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த அசோக் சவாண், தனக்கு அல்லது தன் மனைவி போட்டியிடுவதற்காக கேட்டிருந்த மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டேட் தொகுதியின் வேட்பாளரை அறிவிப்பதிலும் மர்மம் நீடித்து வருகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai