சுடச்சுட

  

  திண்டுக்கல், தேனி தொகுதிகளில்முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம்

  By dn  |   Published on : 25th March 2014 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  admk

  ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) பிரசாரம் செய்கிறார்.

  தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.பார்த்திபனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, தேனி-ஆண்டிபட்டி நெடுஞ்சாலை க.விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள பிரசார பொதுக்கூட்ட மேடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரசாரம் செய்கிறார்.

  அவரது வருகையையொட்டி, க.விலக்கு மற்றும் ஆண்டிபட்டி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் பொதுக்கூட்டத் திடல் மற்றும் மேடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  க.விலக்கில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான சாலையில் இருபுறமும் வட்ட வடிவிலான கொடிகள் அமைக்கப்பட்டு, நடுவில் முதல்வர் ஜெயலலிதா படங்கள் பதிக்கப்பட்டுள்ள பதாகைகள் நடப்பட்டுள்ளன. மேலும் பொதுக்கூட்ட நுழைவாயிலில் செங்கோட்டை வடிவ அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

  சுமார் 2 லட்சம் தொண்டர்கள் பங்கு பெறும் வகையில் 30 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் பொதுக்கூட்ட திடல் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் பங்கேற்கும் மேடையின் எதிரே நாடாளுமன்றம் மற்றும் டில்லி செங்கோட்டை வடிவ மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  முதல்வரின் வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடக்கும் பகுதிகள் போலீஸôரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  முதல்வர் வருகையையொட்டி நடைபெறும் பணிகளை நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

  திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) பிரசாரம் செய்கிறார்.

  திண்டுக்கல் தலைமை மின்வாரிய அலுவலகம் அடுத்துள்ள அங்குவிலாஸ் மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு பேசுகிறார்.

  பிரசார மேடைக்கு எதிர்த் திசையில் செங்கோட்டை மற்றும் நாடாளுமன்றத்தின் உருவ அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை முதல் மின்துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலருமான இரா.விசுவநாதன் பொதுக் கூட்டப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது மாவட்ட அவைத் தலைவர் சி.சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai