சுடச்சுட

  

  தொப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு

  By dn  |   Published on : 25th March 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  24mtp1

  தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெங்களூரு கணினிப் பொறியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

  கேரள மாநிலம், முந்தினிபள்ளியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (35). இவர் பெங்களூருவில் கணினி மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுனில்சூசன் (32), பெங்களூருவில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களது குழந்தைகள் ஆல்வின் (4), செபின் (2).

  இந்த நிலையில், வார விடுமுறையை ஒட்டி, ஜார்ஜ் தனது குடும்பத்தினருடன் முந்தினிபள்ளிக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் அனிஷ் ஓட்டி வந்தார். திங்கள்கிழமை காலை தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூர் அருகே சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது ஏறி இரு பாலங்களுக்கு நடுவே இருந்த  60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில்  ஜார்ஜ், அவரது குழந்தை செபின் (2) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.  பலத்த காயமடைந்த சுனில்சூசன், கார் ஓட்டுநர் அனிஷ் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சுனில்சூசன் அங்கு

  உயிரிழந்தார்.  சிறுவன் ஆல்வின் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  இந்த விபத்து குறித்து தொப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அபுசுதீன் கொடுத்த புகாரின் பேரில், மேச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் உமாசங்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

   

  திரும்பிச் சென்ற தொப்பூர் போலீஸார்

  விபத்து நிகழ்ந்த இடம் தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலைய எல்லையில் உள்ளது. ஆனால், விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த தொப்பூர் போலீஸார், தங்களது எல்லைக்குள்பட்ட பகுதி இல்லை எனத் திரும்பிச் சென்று விட்டனர்.  இதனால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.

  இதையடுத்து, அங்கு வந்த சேலம் மாவட்டம், தீவட்டிபட்டி சோதனைச் சாவடி போலீஸார் மேச்சேரி போலீஸாருக்கு தகவல் அளித்து வரச் செய்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தங்கள் எல்லைக்கு உள்பட்ட பகுதியில்லை என்றாலும், மேச்சேரி போலீஸார் மனிதாபிமான அடிப்படையில் விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்டதை அந்தப் பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai