சுடச்சுட

    

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீவிரவாதி பன்னா இஸ்மாயில் சிகிச்சை முடிந்து சிறைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்து இயக்கத் தலைவர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பன்னா இஸ்மாயில், உடல் நலக்குறைவு காரணமாக  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மார்ச் 13-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மார்ச் 17-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு வார காலத்தில் சிகிச்சை முடிந்து அவர் சிறைக்குத் திரும்புவார் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

    ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் காயங்கள் இன்னும் ஆறாததால், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சுமார் 5 நாள்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். பாதுகாப்பு காரணங்கள் கருதி அவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்து பராமரிக்கப்படுகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai