சுடச்சுட

  

  பாஜகவை ஜெயலலிதா ஏன் விமர்சிக்கவில்லை? பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்

  By dn  |   Published on : 25th March 2014 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  24vrama

  ஆளும் கட்சியை விமர்சிப்பதே எதிர்க் கட்சியினரின் இயல்பு. அவ்வகையில் நாட்டில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த ஆட்சியில் செய்ததையும், செய்யாததையும் சுட்டிக் காட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. அவ்வகையில்தான் ஆளும் காங்கிரஸ் கட்சியை முதல்வர் விமர்சித்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

  வேலூரில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழீழம் பற்றிய கருத்தை வெளியிட்டார். ஆனால் அதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. பாஜக நிச்சயமாக அதை ஏற்றுக் கொள்ளாது.

   சென்ற ஐ.நா.சபையில் இலங்கையைக் கண்டித்து தீர்மானம் வந்தபோது மக்களவையில் அதேபோன்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தன.

   தமிழ்நாடு சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஐ.நா.வில் உள்ள மனித உரிமைக் குழு கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் தில்லியில் கூடினர். அப்போது பாஜக சார்பில் பங்கேற்ற சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் இலங்கை ஒரு தனி நாடு. அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதை நாங்கள் ஏற்க முடியாது என்று மறுத்தனர். அதனால்தான் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. நம்பக் கூடாதவர்களை நம்புவது வைகோவின் வழக்கமாகிவிட்டது.

   மக்களவைத் தேர்தலில் அதிமுகவை 40 மக்களவை தொகுதியிலும் வெற்றிபெறச் செய்வதன் மூலம் தமிழ்நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதை தமிழக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

   பாஜக மீது எந்தவித விமர்சனமும் தமிழக முதல்வர் செய்யவில்லை என்று வேண்டுமென்றே சில அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

  அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இருந்தாலும், ஆளும் கட்சியை விமர்சிப்பதே எதிர்க்கட்சியினரின் இயல்பு. நாட்டில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அவர்கள் ஆட்சியில் செய்ததையும், செய்யாததையும் சுட்டிக் காட்ட வேண்டியதுதான் எதிர்க்கட்சிகளின் கடமை. அப்படி இருக்கும்போது காங்கிரஸை எதிர்த்து பேசுவதுதான் ஜனநாயகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மரபு. அந்த அடிப்படையில்தான் தமிழக முதல்வர் காங்கிரஸ் அரசை விமர்சித்து வருகிறார்.

  5 முனை போட்டியால் பாதிப்பில்லை: தமிழகத்தில் 5 முனை போட்டியால் அதிமுகவின் வெற்றி எவ்வகையிலும் பாதிக்காது.

   தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை இந்த தேர்தலை பெரிதாக கருதவில்லை. வருங்காலத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வருவதற்காக தங்களுக்கு சில கட்சிகளை இரையாக்கிக் கொள்ளவே இந்த அணியைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் கனவு பகல் கனவு என்பது காலப்போக்கில் தெரியும்.

  அணைக்கட்டு எம்எல்ஏ சந்திப்பு: முன்னதாக பண்ருட்டி ராமச்சந்திரனை, பாமகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அணைக்கட்டு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ம.கலையரசு சந்தித்து சென்றார். அதுகுறித்து கேட்டபோது,  கலையரசு எனக்கு நண்பர் அவ்வளவுதான். எம்ஜிஆர் காலத்தில் இருந்து என்னோடு நெருக்கமாக உள்ளவர். அவர் அதிமுகவில் சேருவதும், சேராததும் அவரது விருப்பத்தைப் பொருத்தது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai