Enable Javscript for better performance
பாமகவின் நாகை வேட்பாளர் வடிவேல் ராவணன்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் நாகை (தனி) மாவட்டத்தில் வடிவேல் ராவணன் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்.

    பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    இதில் தருமபுரியில் அன்புமணியும், கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணியும்,  அரக்கோணத்தில் வேலுவும், ஆரணியில் ஏ.கே.மூர்த்தியும், சிதம்பரத்தில் கோபி என்கிற கோபால கிருஷ்ணனும், மயிலாடுதுறையில் அகோரமும், திருவண்ணாமலையில் எதிரொலி மணியனும் போட்டியிடுகின்றனர்.

    நாகப்பட்டினம் (தனி) வடிவேலு ராவணன் போட்டியிட உள்ளார். இதற்கான அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) வெளியிடுகிறார்.

    பாமக சார்பில் மொத்தம் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதில் விழுப்புரம் தொகுதியின் வேட்பாளராக வடிவேலு ராவணன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

    தற்போது, பாஜக அணியில் அந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படாததால், வடிவேலு ராவணன் நாகையில் போட்டியிட உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai