சுடச்சுட

  

  தமிழகத்தில் பாமகவின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ள, புதுவையில் அக்கட்சி வேட்பாளருக்கே தேமுதிக நேசக்கரம் நீட்டும் எனத் தெரிகிறது.

  புதுச்சேரி மாநில பாஜக தலைவர்கள் என்.ஆர்.காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கட்சித் தலைமையை வலியுறுத்தினர். என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளும், பாமக நிர்வாகிகளும் தனித்தனியே பா.ஜ.க.வை சந்தித்து ஆதரவு தரும்படி வலியுறுத்தினர். என்.ஆர்.காங்கிரஸ் பக்கம் செல்வதா பாமக பக்கம் செல்வதா என தெரியாமல் கூட்டணியில் உள்ள மதிமுக, தேமுதிக, ஐஜேகே ஆகிய கட்சிகளும் விழிபிதுங்கி நின்றன.

  இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன்தான் போட்டியிடுவார் என பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் அறிவித்தார்.

  இதனிடையே, பாமக தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அனந்தராமன் பாமக சார்பில் உறுதியாக போட்டியிடுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அனுமதியுடன் அறிவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாமக தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. வரும் 30-ஆம் தேதி அமாவாசையன்று சித்தானந்தா கோயிலில் இருந்து பாமக வேட்பாளர் அனந்தராமன் பிரசாரத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

  பாமகவின் அதிரடியான, உறுதியான இந்த அறிவிப்பு புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

  பாமகவுக்கு சாதகமாக தேமுதிக: இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி தேமுதிக கட்சித் தலைமையை 2 நாள்களுக்கு முன்பு தொடர்புகொண்டு தங்களுக்கு ஆதரவு தரும்படி கோரினார். இந்த கோரிக்கையை ஏற்க தேமுதிக முன்வரவில்லை. கடந்த பேரவைத் தேர்தலில் ஆதரவு அளித்தபோதும் நன்றி கூட தெரிவிக்காத என்.ஆர்.காங்கிரûஸ ஏற்கக்கூடாது என புதுச்சேரி மாநில தேமுதிகவினர் உறுதியாக கூறிவிட்டனர்.

  மேலும் தமிழகத்தில் தேமுதிக, ஐஜேகே போட்டியிடும் இடங்களில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனால் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரûஸ ஆதரித்தால், தமிழகத்தில் பாமகவின் முழுமையான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்பதால் தமிழக கூட்டணியிலேயே நீடிப்பது என்ற முடிவை அக்கட்சிகள் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai