சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் சௌராஷ்டிர முன்னேற்ற கழகம்  போட்டியிட முடிவு

    By dn  |   Published on : 25th March 2014 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. கழக பொதுக்குழு மற்றும் சமூக ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. தலைவர் விஜி ராம்தாஸ் தலைமை வகித்தார். கூட்ட தீர்மானங்கள் வருமாறு:

     தமிழகத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சௌராஷ்டிர மக்கள் வசிக்கின்றனர். பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் வகித்து வருகின்றனர். ஆனால், எந்த அரசியல் கட்சியிலும் இந்த சமூகத்தைச் சார்ந்தவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது இந்த சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

     எனவே, இத்தேர்தலில் சமூகத்தின் சார்பில் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் இளைஞரணித் தலைவர் வினோத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai