Enable Javscript for better performance
மணப்பாறை அருகே நின்ற லாரி மீது கார் மோதி 6 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திங்கள்கிழமை அதிகாலை நின்றுகொண்டிருந்த லாரி மீது டாடா சுமோ கார் மோதியதில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள். மேலும், 4 பேர் படுகாயத்துடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த கு. சுப்பிரமணி (60), அவரது மகன் ஆறுமுகம் (26), சுப்பிரமணியின் தங்கையின் கணவர் கருப்பசாமி (45) மற்றும் உறவினர்கள் செல்லத்துரை (50), அவரது மனைவி ஈஸ்வரி (45), அவர்களது மகன் முத்துவிநாயகம் உள்ளிட்ட 10 பேர் விளாத்திகுளத்திலிருந்து வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்திற்கு மணப்பெண் பார்ப்பதற்கு சென்று விட்டு டாடா சுமோ காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

     கார், திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் வந்தபோது வளநாடு சொரியம்பட்டி வளைவு அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுப்பிரமணி, ஆறுமுகம், கருப்பசாமி, ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் ந. நல்லுராஜ் (29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து மணப்பாறை டி.எஸ்.பி. முத்தரசு மற்றும் துவரங்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் சடலத்தை கைப்பற்றி  மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சுப்பையா (60), பாலு (25), சுப்பிரமணி (26), செல்லத்துரை  (50), முத்துவிநாயகம் (20) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுப்பையா இறந்தார்.

     இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai