Enable Javscript for better performance
மதுரை செல்லும்போது அழகிரியை சந்திப்பேன்: ஞானதேசிகன்- Dinamani

சுடச்சுட

    
    psg

    மதுரை செல்லும் வழியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

    திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை மு.க. அழகிரி சந்தித்துப் பேசினார்.

    இந்த நிலையில் அழகிரியை அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) சந்தித்துப் பேசினார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், சிவகங்கை தொகுதி வேட்பாளருமான எச். ராஜா, அழகிரியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

    இந்தநிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய ஞானதேசிகன், மதுரை செல்லும்போது மு.க. அழகிரியைச் சந்தித்து காங்கிரஸýக்கு ஆதரவு கேட்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai