Enable Javscript for better performance
மத்தியில் அதிமுக இடம்பெறவுள்ள அரசு எது? ஜெயலலிதாவுக்கு ப. சிதம்பரம் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    மத்தியில் அதிமுக இடம்பெறவுள்ள அரசு எது? ஜெயலலிதாவுக்கு ப. சிதம்பரம் கேள்வி

    By dn  |   Published on : 25th March 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pc1

    மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைய வேண்டும் என பேசி வரும் முதல்வர் ஜெயலலிதா அது எந்த அரசு என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

    சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து திங்கள்கிழமை மானாமதுரை ஒன்றியத்தில் கல்குறிச்சி, கொன்னக்குளம், மேலப்பிடாவூர், ஆலம்பச்சேரி, விளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ப. சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் காங்கிரசுக்கு சவால் அல்ல. பாஜக தான் காங்கிரசின் போட்டி கட்சியாகும். தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள் ஒவ்வொன்றும் சில தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்துவிட முடியாது. அது அந்த கட்சிகளின் தலைவர்களுக்கே தெரியும். தனது கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளை கழற்றி விட்டுவிட்டு மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைய வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். அவரது கட்சி அங்கம் வகிக்கப் போகும் அரசு எது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

     கடந்த 5 ஆண்டுகளில் எனக்கு வழங்கப்பட்ட தொகுதி வளர்ச்சி நிதி ரூ.19 கோடி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது. நான் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றவுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதமாக உயர்ந்தது. இதனால்தான் ரூ.69 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தர முடிந்தது என்றார்.   வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், நான் இத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யானால் மத்திய அரசு திட்டங்கள் தவிர தனியார் துறை திட்டங்களையும் இத் தொகுதிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வேன்.

    மத்திய காங்கிரஸ் அரசு மாணவர்களுக்கு கல்விக்கடனை கொடுத்து, படி என்கிறது. ஆனால் ஜெயலலிதா அரசு தமிழகத்தில் மதுக் கடைகளை திறந்து மக்களை குடி என்கிறது. படிக்கச் சொல்லும் அரசு அமைய வாக்காளர்கள் தேர்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai