சுடச்சுட

  

  தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் வரும் நிதியாண்டிலும் (2014-15) தொடர்ந்து பலன் அடைய தங்களது இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

  இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர் டி.சீனிவாசன் கூறியதாவது:

  மாற்றுத் திறனாளிகள் இப்போது பயன்படுத்தி வரும் இலவச பஸ் பயண அட்டை வரும் 31-ஆம் தேதி காலாவதியாகிறது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையை வரும் நிதியாண்டுக்கு (ஏப்ரல் 1 முதல்) புதுப்பிப்பது தொடர்பாக மாற்றுத் திறனாளி நல ஆணையருக்கு அனுமதிக் கடிதம் அனுப்பினேன்.

  திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 100 மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையைப் புதுப்பிக்க பரிந்துரைக் கடிதம் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai