சுடச்சுட

  

  திமுகவின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க.அழகிரியை, மதிமுக வேட்பாளர்கள் சதன் திருமலைக்குமார் (தென்காசி), ஜோயல் (தூத்துக்குடி) ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினர்.

  திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கு எதிரான கருத்துகளைக் கூறி வரும் அழகிரியை, பல்வேறு கட்சியினரும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். மதிமுக பொதுச் செயலர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை அழகிரியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தேனி வேட்பாளர் அழகுசுந்தரம் திங்கள்கிழமை சந்தித்தார்.

  இந்நிலையில், மதிமுக தென்காசி தொகுதி வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் ஜோயல் ஆகியோர் அழகிரியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு கேட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல், மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவதாக அழகிரி கூறியுள்ளார். ஆகவே, மக்களவைத் தேர்தலில் மதிமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது என்றார்.

  தொடர்ந்து, மக்கள் விடுதலைக் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன், அழகிரியைச் சந்தித்துப் பேசினார்.

  எங்களது கட்சி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. மரியாதை நிமித்தமாக அழகிரியை சந்தித்துப் பேசினேன். மேலும், தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.

  பிறகு, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் 50 பேர், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் தலைமையில் அழகிரியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai