கருணாநிதி இன்று பிரசாரம் தொடக்கம்
By dn | Published on : 26th March 2014 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மக்களவைத் தேர்லுக்கான பிரசாரத்தை திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை (மார்ச் 26) தொடங்குகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்
இந்நிலையில் கருணாநிதி புதன்கிழமை பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
வடசென்னை வேட்பாளர் கிரிராஜன், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன், தென்சென்னை வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை ஆதரித்து சேப்பாக்கம் நெடுஞ்சாலையில் கருணாநிதி பிரசாரம் செய்கிறார். இதன் பின் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தொகுதி வாரியாக 12 நாள்கள் சாலை மார்க்கமாக கருணாநிதி பிரசாரம் செய்ய உள்ளார்.