சுடச்சுட

  

  மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்த எஸ்ஸார் கோபி திடீரென கருணாநிதி மற்றும் ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சந்தித்துப் பேசினார்.

  அப்போது அவர், கட்சிக்கு விரோதமான செயலில் மு.க. அழகிரி ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். அழகிரியின் வலதுகரமாக இருந்தவர் எஸ்ஸார் கோபி (படம்) என்பது குறிப்பிடத்தக்கது.

  வைகோ, எச்.ராஜா, அழகுசுந்தரம் என எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக அழகிரியைச் சந்தித்து வந்த நிலையில், அவரது ஆதரவாளர் ஒருவர் 50 பேருடன் கருணாநிதியைச் சந்தித்தது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை அறிவாலயத்தில் கருணாநிதியைச் சந்தித்த பிறகு எஸ்ஸார் கோபி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கட்சிக்கு விரோதமாக அழகிரி செயல்பட்டு வருகிறார். இது எங்களுக்குப் பிடிக்கவில்லை. திமுகவைத் தோற்கடிக்கவும் முயற்சி செய்கிறார். அதை நாங்கள் விரும்பவில்லை. கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டு நாங்கள் நடப்போம். திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இனி நிம்மதியாக பணியாற்றுவோம்.

  கடந்த 20 ஆண்டுகளாக அழகிரிக்கு பக்கபலமாக இருந்து வந்தோம். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டாம் என்று கூறினோம். அதை அவர் கேட்கவில்லை. தற்போது திமுகவுக்கு எதிரான வைகோவை சந்தித்துப் பேசுவது சரியான அணுகுமுறை இல்லை. அதனால் அவரிடம் இருந்து விலகினோம். திமுக அனைத்துத் தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும் என்றார் எஸ்ஸார் கோபி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai