சுடச்சுட

  
  congress

  வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு ஒரு தொகுதி மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர்.

  தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இதுவரை 33 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், திருச்சி தொகுதி மட்டும் பெண் வேட்பாளரான சாருபாலா தொண்டைமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 32 தொகுதிகளிலும் ஆண்களே போட்டியிடுகின்றனர்.

  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராணி, முன்னாள் எம்எல்ஏக்கள் ராணி வெங்கடேசன், மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் சுமார் 50-க்கும் அதிகமான பெண்கள் சத்தியமூர்த்தி பவனை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் சமாதானப்படுத்தினார்.

  நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என பெண்கள் போராடி வருகின்றனர். பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் குரல் கொடுத்து வருகிறார்.

  ஆனாலும், அவரின் தலைமையில் இயங்கும் காங்கிரஸில் 33 தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டுமே பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

  இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என முற்றுகையில் ஈடுபட்ட பெண் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  இது குறித்து ஞானதேசிகனிடம் கேட்டபோது, தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 5-க்கும் அதிகமான தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் பரிந்துரைத்தோம்.

  ஆனால், ஒருவருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைத்துள்ளது. பெண்களுக்கு உரிய இடம் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. இது குறித்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுத இருக்கிறேன் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai