சுடச்சுட

  

  தமிழகத்துடன் திருத்தணி இணைந்த 55-ஆவது ஆண்டு தொடக்க விழா வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திருத்தணியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி. அறக்கட்டளையின் நிறுவனர் ம.பொ.சி. மாதவி பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் தமிழக எல்லைகளை மீட்டுத் தந்தவருமான சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய எல்லைப் போராட்டங்களின் மூலம் தமிழகத்துடன் திருத்தணி 1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி இணைக்கப்பட்டது.

  திருத்தணி, தமிழகத்துடன் இணைந்து 54 ஆண்டுகள் முடிவடைந்து 55ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் கவிஞர் கா.மு. ஷெரிப், கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நூற்றாண்டு விழா வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருத்தணி ம.பொ.சி. சிலை எதிரில் உள்ள வன்னியர் சத்திரத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பழ.நெடுமாறன் தலைமையில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், தமிழரசு கழகத் தோழர்கள் சிறப்புரையாற்றுகின்றனர். இதில் எல்லைப் போராட்ட வீரர்கள் சிறப்பிக்கப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai