சுடச்சுட

  

  திருவள்ளூர் பகுதியில் சாமந்திப்பூ விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

  By dn  |   Published on : 26th March 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  flower

  ிருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் சாமந்திப்பூ விளைச்சல் அமோகவுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  திருவள்ளூர் மற்றும் பூண்டி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சாமந்தி, மல்லி, ரோஜா போன்ற பூந்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்த தோட்டங்களில் தற்போது சாமந்தி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம், மோவூர், நெய்வேலி, சிற்றம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சாமந்தி, மல்லி, கனகாம்பரம், ரோஜா, முல்லை போன்ற பூக்கள் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் பூக்களின் விலையும் குறைந்து வருகிறது.

  இதுகுறித்து புல்லரம்பாக்கம் அருகே விவசாயம் செய்து வரும் விவசாயி ஒருவர் கூறியது: நாங்கள் சாமந்தி நாற்றை கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து ஒரு நாற்று ரூ.2.10-க்கு வாங்கி வந்து பயிரிட்டோம்.

  சாமந்தி 45 நாள்களுக்கு பிறகுதான் பூ பூக்க தொடங்கும். இந்த முறையும் பூ விளைச்சல் நன்றாக உள்ளது.

  நான் பயிரிட்டுள்ள 20 சென்ட் நிலத்தில் தினந்தோறும் 20 முதல் 25 கிலோ வரை பூ விளைகிறது. அங்கு மொத்தமாக ஒரு கிலோ ரூ.20 முதல் 30 வரை நாள்தோறும் நிர்ணயிக்கும் விலைக்கேற்ப விற்று வருகிறோம் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai