சுடச்சுட

  

  பத்தாம் வகுப்புத் தேர்வு தமிழ் முதல் தாளுடன் புதன்கிழமை (மார்ச் 26) தொடங்கியது.

  முதல் தேர்வான தமிழ் முதல் தாளின் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.

  அரசுத் தேர்வுகள் துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுப் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள், தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

  விடைத்தாள் புத்தகப் பக்கங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட புதிய மாற்றங்களுக்கும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

  புழல் சிறையில் சிறைக் கைதிகளுக்கான தேர்வு மையத்தை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் மேற்பார்வையிட்டார். அந்த மையத்தில் 43 பேர் 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.

  தேர்வு நேர மாற்றம்:

  பத்தாம் வகுப்புத் தேர்வு 45 நிமிஷங்களுக்கு முன்கூட்டியே 9.15 மணிக்குத் தொடங்கியது.

  தேர்வு நேர மாற்றம், பெரும்பாலான மாணவர்களை பாதிக்கவில்லை என்றாலும், கிராமப்புறங்களில் சில மாணவர்கள் தேர்வுக்கு தாமதமாக வந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

  திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில கிராமப்புற மாணவர்கள் 15 நிமிஷங்கள் முதல் 30 நிமிஷங்கள் வரை தேர்வு மையங்களுக்குத் தாமதமாக வந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

  ஆனால், நகர்ப்புறங்களில் இந்த நேர மாற்றத்தை மாணவர்கள் வரவேற்றனர். காலையில் வெயிலுக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் காப்பியடித்ததாக 5 மாணவர்கள் மட்டுமே பிடிபட்டனர்.

  பத்தாம் வகுப்புத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 3,179 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 38 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 286 தேர்வு மையங்களில் 74 ஆயிரம் பேரும் எழுதினர். இந்தத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai