சுடச்சுட

    

    நோட்டாவின் சின்னம் "தலைகீழ் கட்டைவிரல்'? பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்

    By dn  |   Published on : 26th March 2014 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thumbsdown

    தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் வழங்கப்படுவது போல, நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம் வழங்க பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மேற்கூறிய நபர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (சஞசஉ ஞஊ பஏஉ அஆஞயஉ-சஞபஅ) என்பதைக் குறிப்பதற்கு கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்ற சின்னத்தை வடிவமைக்க பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வழக்குரைஞர் எஸ்.சத்யச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

    வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனில் தேர்தல் நடத்தை விதிகளின்படி 49-ஓவை பயன்படுத்தலாம். இதற்கு வாக்காளர்கள் 17-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்து வெளிப்படையாகத்தான் தெரிவிக்க முடியும். இந்த முறையை பயன்படுத்துவதால் வாக்காளர்கள் தங்களின் ரகசியத் தன்மை பாதிப்பதாக கருதினர்.

    எனவே, வாக்காளர்களின் ரகசியத் தன்மையை காக்கும் விதமாக கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், நோட்டா பட்டனை உருவாக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன் மூலம், வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் வாக்குசாவடிக்குச் சென்று நோட்டா பட்டனை மட்டும் அழுத்தினால் போதும். இதன் மூலம் வாக்காளர்களின் ரகசியத் தன்மை காக்கப்படும்.

    சட்டப்பேரவைத் தேர்தல் வாக்களிப்பின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் நோட்டா பட்டன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நோட்டாவுக்கெனத் தனியாக சின்னம் ஏதும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

    இந்தியாவில் படிப்பறிவில்லாதவர்கள் பயன்படுத்தும் வகையில் நோட்டா பட்டன் இல்லை. நோட்டா பட்டன் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை. அதனால், மேற்கூறிய நபர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைக் குறிப்பதற்கு கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்று அதன் சின்னத்தை வடிவமைக்க வேண்டும்.

    நோட்டாவுக்கென தனிச் சின்னம் உருவாக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய பட்டியல் சீட்டில் நோட்டாவுக்கென தனிச் சின்னம் இடம் பெறுவது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    அதில், நோட்டா சின்னத்துக்கான வடிவமைப்பை தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது. அதன்படி, கருப்பு நிறத்திலான செவ்வக வடிவ வட்டத்துக்குள் (நான்கு விளிம்புகளும் வட்டமாக்கப்பட்டு இருக்கும்) நோட்டா (சஞபஅ) என்பது ஆங்கிலத்தில் வெள்ளை நிற எழுத்துகளால் எழுதப்பட்டும், தமிழ் மொழியில், மேற்காணும் நபர்கள் எவருமில்லை என்றும் அச்சிடப்பட்டு இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும், மனுதாரர் தெரிவித்தது போல், மேற்கூறிய நபர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைக் குறிப்பதற்கு கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்று அதன் சின்னத்தை வடிவமைப்பதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai