சுடச்சுட

    

    மின் பயன்பாடு: அதிகபட்ச அளவாக 271 மில்லியன் யூனிட்டுகளைத் தாண்டியது

    By dn  |   Published on : 26th March 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மின் பயன்பாடு இதுவரையில்லாத வகையில், மிக அதிகபட்சமாக 271 மில்லியன் யூனிட்டுகளை திங்கள்கிழமை (மார்ச் 24) கடந்தது.

    கடந்த 01.10.13-ஆம் தேதி 269.65 மில்லியன் யூனிட்டுகள் மின் பயன்பாடுதான் மிக அதிகபட்ச அளவாக இருந்தது. ஆனால், திங்கள்கிழமை 1.4 மில்லியன் யூனிட்டுகள் கூடுதலாக மின் பயன்பாடு இருந்தது. மின் பயன்பாடு 24 மணி நேரத்துக்கு ஒருமுறை கணக்கிடப்படும். அந்த அடிப்படையில், திங்கள்கிழமை மிக அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி 12,236 மெகாவாட்டாக இருந்தது.

    புதிய யூனிட்டுகள் அதிகபட்சமாக மின் உற்பத்தி செய்ததே இதற்குக் காரணம். இந்த 271 மில்லியன் யூனிட்டுகளில் 3 மில்லியன் யூனிட்டுகள் மட்டுமே காற்றாலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. மீதமுள்ள 268 மில்லியன் யூனிட்டுகளும் அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள் போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டவை என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செவ்வாய்க்கிழமை காலை 495 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை இருந்தது. மேட்டூரில் உள்ள புதிய யூனிட் வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தால் இந்த மின் பற்றாக்குறை நீங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai