மேலும் 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
By dn | Published on : 26th March 2014 01:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழகத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் எச். வசந்தகுமார், கிருஷ்ணகிரியில் அகில இந்தியச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கரூரில் மகிளா காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஜோதிமணி, வட சென்னையில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி பிஜூ சாக்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 37 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னை, விழுப்புரம் (தனி) தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முக்கிய காங்கிரஸ் வேட்பாளர்கள்: தருமபுரியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாûஸ எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் போட்டியிடுகிறார்.
கிருஷ்ணகிரியில் பாமக தலைவர் ஜி.கே. மணியை எதிர்த்து காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் போட்டியிடுகிறார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - திருப்பூர், மத்திய நிதி அமைச்சர் மகன் கார்த்தி சிதம்பரம் - சிவகங்கை, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் - மயிலாடுதுறை, அகில இந்தியச் செயலாளர்கள் சு. திருநாவுக்கரசர் - ராமநாதபுரம், ஜெயக்குமார் - தென்காசி (தனி), முன்னாள் அமைச்சர் பிரபு - கோவை, முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் - சேலம், முன்னாள் அமைச்சர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணு பிரசாத் - ஆரணி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.