சுடச்சுட

    

    "என்னை நீக்கத் தூண்டியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்'

    Published on : 27th March 2014 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    alagiri

    திமுகவிலிருந்து என்னை நீக்கத் தூண்டியவர்கள் மீது, கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மு.க.அழகிரி கூறினார்.

    திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புதன்கிழமை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

    கேள்வி: அறிவாலயம் செல்கிறீர்களா?

    பதில்: ஆரணி செல்கிறேன்.

    கே: திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ள நிலையில், உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

    ப: என் மீது நடவடிக்கை எடுக்க யார் தூண்டுதலாக இருந்தார்களோ அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க மாட்டேன். என் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் மீது 2 மாதத்தில் அவர்கள் (தலைவர்கள்) நடவடிக்கை எடுப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

    கே: உங்கள் நண்பர் எஸ்ஸார் கோபி திடீரென ஸ்டாலினுடன் இணைந்துள்ளாரே?

    ப: நண்பர்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

    கே: உங்களை ஓரம் கட்டி விட்டு மு.க.ஸ்டாலினை தலைவராக்க முயற்சி நடக்கிறதா?

    ப: நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். திமுகவின் சொத்தைப் பாதுகாக்கத்தான் ஸ்டாலின் தலைவராக முயற்சிக்கிறார். இவ்வாறு அழகிரி பேட்டி அளித்தார்.

    மு.க.அழகிரியை வரவேற்க விமான நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்திருந்தனர்.

    அழகிரியுடன் வசந்தகுமார் சந்திப்பு: முன்னதாக தில்லியில் இருந்து சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளர் எச்.வசந்தகுமார் விமான நிலையத்தில் மு.க.அழகிரியை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமாறு அழகிரியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai