சுடச்சுட

  

  எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் கட்டக் கோரிக்கை

  By dn  |   Published on : 27th March 2014 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மறைந்த பிரபல திரைப்பட நடிகரும், பாடகருமான எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு தமிழக அரசு சென்னையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழ் மாநில விஸ்வகர்ம தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  சென்னையில் தமிழ் மாநில விஸ்வகர்ம தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சி.வேலு ஆச்சாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் விஸ்வகர்ம தொழிலாளரை அறங்காவலர் குழுவில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் எம்.மாரிமுத்து, பொருளாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளைஞர் அணி செயலாளர்கள் பி.என்.செந்தில்குமார், எஸ்.சரவணன், காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் பி,வெங்கடாசலபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai