சுடச்சுட

    

    கிராமங்களில் பணிபுரிந்த அரசு டாக்டர்களுக்கு "போனஸ்' மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    Published on : 27th March 2014 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Madras High Court

    தொலைதூர கிராமங்களில் பணிபுரிந்த அரசு டாக்டர்கள் 3 பேருக்கு முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கையின் போது போனஸ் மதிபெண்கள் வழங்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக டாக்டர்கள் ஆர்.பரமகுரு, எஸ்.சுகன்யா மற்றும் வி.சரவணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி பொது சுகாதாரத் துறை மூலம் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்களாக 3 பேரும் நியமிக்கப்பட்டோம். பரமகுரு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரிலும், சுகன்யா மற்றும் சரவணன் ஆகியோர் சங்கராபுரத்திலும் பணியமர்த்தப்பட்டோம்.

    பணியிலிருந்த போது, முதுநிலை படிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு செயலாளர் அறிவித்தார். தொலைதூர கிராமங்களில் பணியாற்றியவர்கள், சேவை வேட்பாளர்கள் பிரிவுக்குக் கீழும், தொடர்ந்து போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும். இது தொடர்பாக 2010-ஆம் ஆண்டு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், எங்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கி, சேர்க்கைக்கான கவுன்சலிங் தரவரிசைப் பட்டியலில் எங்களது பெயர்களை வெளியிட மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த மனு, நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.தங்கசிவன் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

    இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து பார்க்கையில், மனுதாரர்கள் மலைப்பகுதிகளில் பணிபுரியவில்லை என்பது உண்மை. ஆனால், 2010-ஆம் ஆண்டு அரசாணைப்படி மனுதாரர்கள் அந்தப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி, 3 அல்லது 5 ஆண்டுகள் அங்கு பணியாற்றினால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க கருத்தில் கொள்ளலாம்.

    அதனால், 2010-ஆம் ஆண்டு அரசாணைப்படி, மருத்துவக் கல்வி இயக்ககம் மனுதாரர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

    மேலும், 2014-15-ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் அவர்களது பெயர்களை வெளியிட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai