சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் ஜனதா தளத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு

    By dn  |   Published on : 27th March 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிப்பது என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:

    நடைபெறவுள்ள 16-ஆவது மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய இரண்டு தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் 18 தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிப்பது என மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவெடுத்துள்ளது.

    இதனை வரவேற்பதோடு கிருஷ்ணகிரி, திருவண்ணாலை தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர்களை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த இரு தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai