சுடச்சுட

  
  gurubhagawan

  அருள்மிகு குருபகவான் வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.

  இதையொட்டி, நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.

  இதை முன்னிட்டு, குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறும். மீண்டும் குருபெயர்ச்சிக்குப்பிறகு ஜூன் 16-ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 2-ஆவது கட்ட லட்சார்ச்சனை நடைபெறும்.

  மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்கலாம்.

  லட்சார்ச்சனை கட்டணம் ரூ. 400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினாலான டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.

  குருபெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோயில் அலுவலருமான செ. சிவராம்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai