Enable Javscript for better performance
பண்ருட்டி மீது பிரேமலதா தாக்கு- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி மீது பிரேமலதா தாக்கு

    By dn  |   Published on : 27th March 2014 02:51 AM  |   அ+அ அ-   |    |  

    premalatha

    அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு எந்தவித அடையாளமும் இல்லாமல் இருந்தவரை ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினராக்கினோம். அவரோ ஓய்வு பெறுவதாகக் கூறி அதிமுகவில் சேர்ந்து துரோகம் இழைத்து விட்டார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

    பாஜக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திருவள்ளூர் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:

    அரசியலில் ஓரம் கட்டப்பட்டு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தவரை ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினராகி அழகுப் பார்த்தவர் விஜயகாந்த். ஆனால், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி விலகிச் சென்று அதிமுகவுடன் சேர்ந்து விட்டார். எனவே, நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் ஆலந்தூர் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் குடிநீர்ப் பிரச்னை மற்றும் பாதாள சாக்கடை, மழைநீர், கழிவுநீர் கால்வாய்கள், தரமான மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் தொடங்கி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். தமிழ்நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை சரி செய்யப்படும்.

    பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தில் 3 அதிமுக அமைச்சர்கள், 1 எம்.பி. இருக்கின்றனர். இருப்பினும் இம்மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்த பின்னர், இதுவரை எந்த திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.

    மத்தியில் ஊழலற்ற நிலையான ஆட்சியை நரேந்திர மோடி மட்டுமே தர முடியும்.

    நரேந்திர மோடியைப் போல முதல்வர் ஜெயலலிதாவும் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியுமா? இந்தியாவிலேயே ரூ.10-க்கு குடிநீரை விற்பனை செய்தது அதிமுக மட்டும்தான்.

    தமிழக மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, மாறாக இலவசக் கல்வி, தடையற்ற மின்சாரம், 24 மணிநேர குடிநீர் வசதி, மருத்துவம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

    அதிமுக ஆட்சியில் ஏராளமான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர் என்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp