சுடச்சுட

    

    பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை: விஜயகாந்த் பேச்சு

    By dn  |   Published on : 27th March 2014 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijayakanth_canvas1

    "நான் உழைப்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்; பிழைப்பதற்காக வரவில்லை' என்று விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

    பழைய பஸ் நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது: விழுப்புரம் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கல்வித் துறையை கேட்டுப் பெறுபவர்கள், விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை. அதேபோல் சுகாதாரத்துறையை கேட்டுப் பெறுபவர்களும் மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.

    விழுப்புரம் நகைத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் பாரபட்சம்: விழுப்புரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் நகைத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு நன்மை தரும் மத்திய அரசின் "ஸ்டார் சொர்ணகார்' திட்டம், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே நகைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

    நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். தேமுதிக பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகுதான் அத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தேன். ஆனால், அவர்களோ தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று முதல்வர் கூறி வருகிறார். இதில் மாநில அரசின் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வரிதான் முக்கிய காரணம். அதனை குறைக்க வேண்டும். இத் தேர்தலில், திமுக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். நான் அரசியலுக்கு உழைப்பதற்காக வந்துள்ளேன்; பிழைப்பதற்காக வரவில்லை. எங்கள் கட்சியின் கொள்கையே "இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கே' என்பதாகும் என்றார்.

    கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai